தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சென்னை தேசிய புலனாய்வு முகமை (NIA) கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்களை வெளியிடப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு இன்று காலை தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.இதுபோன்ற மிரட்டல்கள் வழக்கமாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குதான் வரும். ஆனால், NIA அலுவலகத்துக்கே தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.
இதனைத் தொடர்ந்து, மர்ம நபர் தொடர்பு கொண்ட தொலைப்பேசி எண்ணை வைத்து சென்னை காவல்துறையினருடன், NIA அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply