கலை, அறிவியல், பொறியியல், மற்றும் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்கள் வழக்கமாக கருப்பு நிற அங்கியும், தொப்பியும் அணிந்து பட்டங்களை பெறுவது நடைமுறையாக இருந்து வந்தது. ஆனால், இப்போது மருத்துவ மாணவர்கள் இனி பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த கலாசாரம் ஐரோப்பிய நாடுகளில் தொடங்கியது என்றும், ஆங்கிலேயர்கள் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியதையும் சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, இந்த காலனி ஆதிக்க நடைமுறையை மாற்ற வேண்டியது அவசியம் என்று அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கு பதிலாக, இந்திய பாரம்பரிய உடைகளை அணியலாம் என்றும், மருத்துவ கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப, பட்டமளிப்பு விழாவிற்கான உடை விதிமுறைகளை நிர்ணயிக்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply