பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

  • கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு கோயில்களும் சார்தாம் என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோயில்கள் ஆண்டுதோறும் ஆறு மாதங்கள் பக்தர்களின் தரிசனத்துக்கான திறக்கப்பட்டு, குளிர்காலம் தொடங்கும்போது கோயில்களின் நடை மூடப்படுகின்றது.அதன்படி, கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் ஆகிய மூன்று கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.இந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று(மே 12) காலை 6 மணிக்கு மேள தாளங்கள் முழங்க திறக்கப்பட்டது. நடை திறப்பு விழாவில் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம் மேலும், சுவாமி தரிசத்திற்காக ஏராளமான பக்தர்கள் பத்ரிநாத் கோயிலில் குவிந்துள்ளனர்.விஷ்ணு பகவானுக்குரிய இக்கோயில், வழக்கமாக குளிா்காலத்தையொட்டி சாத்தப்பட்டு, பின்னா் கோடை காலத்தின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க  மோடி கா பரிவார் பிரசாரம் துவக்கம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செயற்கைக்கோள்களில் இடையூறு ஏற்படுத்தும் சூரிய புயல் <br>

Sun May 12 , 2024
எலோன் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்க், இரண்டு தசாப்தங்களில் சூரிய செயல்பாடு காரணமாக பூமி மிகப்பெரிய புவி காந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளதால் “சீரழிந்த சேவை” குறித்து எச்சரித்தது. செயற்கைக்கோள் இணையத்தில் ஒரு மேலாதிக்க வீரர், பூமியைச் சுற்றி வரும் சுமார் 7,500 செயற்கைக்கோள்களில் 60% ஐ ஸ்டார்லிங்க் கொண்டுள்ளது. சூரியனில் இருந்து தொடர்ச்சியான சூரிய எரிப்புகள் மற்றும் கொரோனல் வெகுஜன வெளியேற்றங்கள் உலகம் முழுவதும் அரோராக்களை உருவாக்கியது. […]
Screenshot 20240512 094749 inshorts - செயற்கைக்கோள்களில் இடையூறு ஏற்படுத்தும் சூரிய புயல் <br>

You May Like