
கர்நாடகத்தைச் சேர்ந்த மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச காணொலிகளைப் பரப்பியதாக 2 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று(மே28) கைது செய்துள்ளனர்.
பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி, அவற்றை ஆபாச காணொலிகளாக பிரஜ்வல் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காணொலிகள் அடங்கிய பென்டிரைவ்களை பொது வெளியில் பரப்பியது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக எஸ்.ஐ.டி. தெரிவித்துள்ளது. பாலியல் வழக்கில் சிக்கி, வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் வரும் மே 31ஆம் தேதி நாடு திரும்பி எஸ்.ஐ.டி. விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவரது வருகைக்குப் பிறகு, இந்த வழக்கு மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.