கேரளத்தின் புகழ்பெற்ற கலாமண்டலத்தில் முதன்முறையாக அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது.
கலாமண்டலத்தில் தினசரி சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறி, மாணவர்கள் அசைவ உணவு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற கலாமண்டல நிர்வாகம், கலாமண்டலத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த புதன்கிழமையில் (ஜூலை 10) சிக்கன் பிரியாணி வழங்கியது.
மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்ட பிறகும், இதுவரை எந்தவிதமான புகார்களும் கிடைக்காததால், எதிர்காலத்தில் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அசைவ உணவு வழங்குவது குறித்து ஆலோசனை நடப்பதாகக் கலாமண்டல நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த கலாமண்டலத்தில் கதகளி, மோகினியாட்டம், துள்ளல், குட்டியாட்டம், பஞ்சவாத்தியம், கர்நாடக இசை, மிருதங்கம் போன்ற பல்வேறு கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.