கோவை மாவட்டம் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் சுமார் 10 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அண்மையில் தடாகம் வனப் பகுதியில் இருந்து மருதமலை வனப் பகுதிக்குள் வந்த இந்த யானை கூட்டம் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை உடைத்து அரிசி புண்ணாக்கு, உள்ளிட்ட உணவு பொருட்களை தேடுவதால் மனித விலங்கு […]
தமிழ்நாடு
கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவித்திட முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத் துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் ஒரு அங்கமாக வ.உ.சி பூங்காவில் […]
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு ஜூலை 26ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுசம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால […]
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச பால் கொள்முதலாக 36.09 இலட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய்துள்ளது. மேலும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உள்ளூர் விற்பனையான 4 இலட்சம் லிட்டர் பால் கணக்கில் கொள்ளும்போது தமிழ்நாட்டில் பால்வளத்துறை மூலமாக 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2800 மெ.டன் வெண்ணெய்யும், 4200 மெ.டன் பால் […]
திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறது. காந்தி மார்க்கெட்டை ஒட்டி மீன் மார்க்கெட், கறிக்கடை மார்க்கெட் உள்ளது .இந்த பழைய மார்க்கெட் அகற்றப்பட்டு ரூ 13 கோடியில் 148 கடைகள் மீன் மார்க்கெட்டிற்காக கட்டப்பட்டது. இதில் கீழ் தளத்தில் 74 […]
நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, கூடுதல் பேருந்துகளை இயக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகம். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தாம்பரத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. பல்லாவரம் – கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 பேருந்துகள் மூலமாக 571 நடைகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பேருந்துகள் […]
நீட் முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி நீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் – மாணிக்கம் தாகூர். “ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்” – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். “நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் […]
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணை கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் மதியம் மூன்று மணிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாதங்களை முன்வைத்தார் அறுவை சிகிச்சை செய்த ஒருவரை நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாதவர் என கூற முடியுமா என நீதிபதிகள் […]
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (22.07.24) காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 74,000 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ள திமுக அரசை கண்டித்தும், அந்த முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட அதிமுகவினர் அல்லித்துறை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி. விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்