கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 5 கடமான்கள் : வனத்தில் விடுவித்த வனத் துறையினர் – துள்ளி குதித்து வனப் பகுதிக்குள் சென்றது.

VideoCapture 20240723 130013 - கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட 5 கடமான்கள் : வனத்தில் விடுவித்த வனத் துறையினர் - துள்ளி குதித்து வனப் பகுதிக்குள் சென்றது.<br>




கோவை வ.உ.சி வன உயிரியல் பூங்காவிற்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து இந்திய அரசால் மறுக்கப்பட்டது. தொடர்ந்து அதில் பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவித்திட முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்ததை தொடர்ந்து கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத் துறையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் ஒரு அங்கமாக  வ.உ.சி பூங்காவில்  பராமரிக்கப்படும் கடமான்களை மாற்றம் செய்திட அதன் புழுக்கைகளை (“faecal pellets”) ஆய்வகத்திற்கு (“AIWC, Vandalur”) அனுப்பப்பட்டு புள்ளி மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது.பின்பு மார்ச் 2024 மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து இவைகளை வனப் பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத்துறை மூலம் கூண்டு கட்டமைக்கப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 4 ம் தேதி 5  கடமான்களும், 12 ம் தேதி 6 கட மாக்கல் மற்றும் 20 ம் தேதி 5 கட மான்களும் விடுவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 5 கட மான்கள் பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப் பகுதியில் நல்ல முறையில் விடுவிக்கப்பட்டது.விடுவிக்கப்பட்ட கட மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருவதாக வனத்துறை என தெரிவித்தனர்.

இதையும் படிக்க  ஆம்ஸ்ட்ராங் கொலை – டைரக்டர் நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *