தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச பால் கொள்முதலாக 36.09 இலட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய்துள்ளது. மேலும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உள்ளூர் விற்பனையான 4 இலட்சம் லிட்டர் பால் கணக்கில் கொள்ளும்போது தமிழ்நாட்டில் பால்வளத்துறை மூலமாக 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2800 மெ.டன் வெண்ணெய்யும், 4200 மெ.டன் பால் பவுடரும் கையிருப்பில் உள்ளது.
மேற்காணும் கையிருப்பைக் கொண்டு எதிர்வரும் பண்டிகை காலங்களுக்கு தேவையான பால் பொருட்களை பொது மக்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்வது உறுதி செய்யப்படும். மேலும் பொது மக்களுக்கு ஆவினின் அனைத்து வகையான பொருட்களும் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் தயிர் மற்றும் பன்னீர் விற்பனையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் தோறும் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச பால் கொள்முதல் செய்துள்ள ஆவின் நிறுவனம்…..
Follow Us
Recent Posts
-
ஆனைமலையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
-
கோவையில் ஓணம் விருந்தில் 22 வகை உணவு, தங்க நாணய பரிசு!
-
27-வது மாநில அளவிலான வனத்துறை விளையாட்டுப் போட்டிகளை கோவையில் துவக்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்
-
கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம்: பொதுமக்களின் குறைகள் நீக்க நடவடிக்கை!
-
“நவ.12 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு”
Leave a Reply