நீட் முறைகேடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி
நீட் முறைகேடுகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் – மாணிக்கம் தாகூர்.
“ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்” – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
“நீட் தேர்வால் அனிதாவில் தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்”
பணமிருந்தால் இந்திய தேர்வுமுறையை வாங்கிவிடலாம் – ராகுல் காந்தி
பணமிருந்தால் போதும்; இந்திய தேர்வுமுறையை வாங்கிவிடலாம் என மக்கள் பேசுகின்றனர்.
லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வு முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நமது தேர்வு முறையில் மிகப்பெரிய பிரச்னை இருக்கிறது; இந்திய தேர்வு முறையே மிகப்பெரிய மோசடி-மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
கல்வி அமைச்சர் தன்னை தவிர மற்ற அனைவரையும் பொறுப்பாளியாக்க பார்க்கிறார்-ராகுல் காந்தி.