ஆம் ஆத்மி மாநிலங்களவை எம். பி. சுவாதி மாலிவால், மே 13 அன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் தனது “சீர் ஹரன்” நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து தினசரி ஆளுமை படுகொலை நடந்ததாகவும் குற்றம் சாட்டினார். நீதிமன்றத்திற்கு வெளியே நியாயமற்ற விசாரணை மற்றும் கட்சியில் உள்ள சக வெற்றியாளர்களின் ஆதரவு இல்லாததை மேற்கோள் காட்டினார்.  அவரது புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் பிபவ் குமாரை கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்பு முகமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக சென்னை தேசிய புலனாய்வு முகமை (NIA) கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண்களை வெளியிடப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு இன்று காலை தொடர்பு கொண்ட மர்ம நபர், பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாக ஹிந்தியில் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.இதுபோன்ற மிரட்டல்கள் வழக்கமாக சென்னை காவல் […]

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மே 22 அன்று மாநிலத்தில் உள்ள பல வகுப்புகளின் ஓபிசி அந்தஸ்தை ரத்து செய்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை “ஏற்க மாட்டேன்” என்று வலியுறுத்தினார். இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்யலாம் என்று சுட்டிக்காட்டினார்.தேர்தல் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் சம்பந்தப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதால், மாநிலத்தில் ஓபிசி இடஒதுக்கீடு தொடரும் என்றார்.

முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு (பிஏஎம்) சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயது சிறுமி மே 20 திங்கள் அன்று கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் உயிரிழந்துள்ளது. முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (பி. ஏ. எம்) என்பது நேக்லேரியா ஃபோலேரியால் ஏற்படும் ஒரு அரிய வகை மூளை நோய்த்தொற்று ஆகும், இது பொதுவாக “மூளை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படுகிறது. சிறுமி  உறவினர்களுடன் தனது வீட்டிற்க்கு அருகிலுள்ள ஆற்றில் குளித்த பிறகு இந்த […]

ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு திங்களன்று நடைபெற்றது.இதில்,60.48 சதவீத வாக்குகள் பதிவாகின.ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாராமுல்லாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் சில வாக்குச்சாவடிகளில் ஈ. வி. எம் குறைபாடுகள் தவிர, மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியின் மறைவுக்கு பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக, விபத்தில் உயிரிழந்த ரய்சி, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், நாடு முழுவதும் வழக்கமாக தேசியக் கொடி பறக்கவிடப்படும் அனைத்துக் கட்டடங்களில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும் என்றும் மத்திய உள்துறை […]

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், இப்ராஹிம் ரய்சி மறைவால் ஆழ்ந்த வருத்ததும, அதிர்ச்சியும் அடைந்தேன். இப்ராஹிம் ரய்சியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா-ஈரான் இருத்தரப்பு உறவை வலுப்படுத்த அவரது பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் துணை நிர்கிறது. இவ்வாறாக தனது இரங்கல் செய்தியை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.5 ஆம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகாா், ஒடிஸாவில் தலா 5, ஜாா்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் காலை […]

உத்தரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த 17வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர்.உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஃபரூக்காபாத் தொகுதியில் 4-ம் கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பாஜக வேட்பாளர் முகேஷ் ராஜ்புத்துக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களிக்கும் விடியோ இணையதளங்களில் வைரலானது. இந்த விடியோவை காங்கிரஸ், சமாஜவாதி கட்சி அகிலேஷ் யாதவ் […]

மக்களவைத் தேர்தல்:ஆறாம் கட்டத் தோ்தலில் 889 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். கடந்த ஏப். 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்டத் தோ்தல் இன்று (மே 20) நடைபெற்று வருகிறது.ஆறாம் கட்டத் தோ்தல் 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 58 தொகுதிகளுக்கு மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 1978 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிகபட்சமாக […]