முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு (பிஏஎம்) சிகிச்சை பெற்று வந்த ஐந்து வயது சிறுமி மே 20 திங்கள் அன்று கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் உயிரிழந்துள்ளது. முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (பி. ஏ. எம்) என்பது நேக்லேரியா ஃபோலேரியால் ஏற்படும் ஒரு அரிய வகை மூளை நோய்த்தொற்று ஆகும், இது பொதுவாக “மூளை உண்ணும் அமீபா” என்று அழைக்கப்படுகிறது. சிறுமி உறவினர்களுடன் தனது வீட்டிற்க்கு அருகிலுள்ள ஆற்றில் குளித்த பிறகு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.