பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி யில் பா.ஜனதா கூட்டணி சார்பில் இந் திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரி வேந்தர் போட்டியிடுகிறார். இவர் நேற்று குளித்தலை சட்டமன்ற தொகு திக்குட்பட்ட ஆர்.டி.மலை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் திறந்தவேனில் நின்றவாறு பேசி யதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்க ளித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்தால் பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதியில் 1,500 ஏழை, எளிய குடும்பங்கள் ரூ.10 லட்சம் வரை இலவச உயர்சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல் பெரம்ப லூர் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுக ளுக்கு மேலாக நிறைவேற்றப்படாத ரெயில்வே திட்டத்தை நிறைவேற்றிக் கொடுப்பேன். என்னை மீண்டும் எம்.பி ஆக்கினால் நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து தோகை மலை பகுதிக்கு தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தருவேன்.இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயசீலன், முதன்மை அமைப்பு செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் விநா யகா பிச்சை, பா.ஜனதா மாநில மக ளிர் அணி தலைவி மீனா வினோத்கு மார், தமிழ் தேச கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் அருள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக் கள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.