“அண்ணாமலைக்கு பதிலாக எச். ராஜா தலைமையில் பாஜக செயல்படும்; தமிழிசை சௌந்தராஜன்

IMG 20240831 WA0005 scaled - "அண்ணாமலைக்கு பதிலாக எச். ராஜா தலைமையில் பாஜக செயல்படும்; தமிழிசை சௌந்தராஜன்

கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: “பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத தலைவர் ஜெ.பி. நட்டா இன்று கோவை வந்து பாலக்காடு செல்கிறார். அவரை வரவேற்க முடிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

அண்ணாமலை வெளிநாடு செல்லும் நிலையில், கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு எச். ராஜா தலைமையில் செயல்படுவதை மகிழ்ச்சியாகப் பார்க்கிறோம். ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கும் இலக்குடன், இக்குழுவும் கட்சியில் உள்ள அனைவரும் தொடர்ந்து செயல்படுவோம்” என அவர் தெரிவித்தார்.

குழுவில் இடம் பெறாதது தொடர்பாக கேட்ட கேள்விக்கு அவர், “நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றுகிறேன். சுமார் நான்கரை ஆண்டுகள் ஆளுநராக செயல்பட்டேன். முழு நேரமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்படுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். கட்சியின் காரியகர்த்தாக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். இடைக்கால தலைவர் பற்றிய பல கருத்துகள் யூகங்களே” என்றார்.

மேலும், தமிழ்நாடு முதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் பெரும்பாலான முதலீடுகள் தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கு மட்டும் உள்ளது. இதை புதிய முதலீடாகக் கருத முடியாது எனத் தெரிவித்தார்.

“சம்மரிக்க்ஷா அபியான் திட்டம் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளாமல் நிதி மற்றும் கேட்கிறது. அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதால் மாணவர்களின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படுகிறது” என்றார்.

“தமிழ் மொழிக்கு பிரதமர் அளித்த மரியாதையை தமிழக தலைவர்கள் வழங்கவில்லை. ஹிந்தி கற்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் நமது உயிர், நமது வாழ்வு, ஆனால் மற்ற மொழிகளை கற்க கூடாது என தமிழ் தாய் நினைக்காது” என்றார்.

மலையாள திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. “எந்த துறையில் இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் தவறு கண்டிக்கத்தக்கது” என கூறினார்.

விஜய் தமிழ்நாட்டில் வெற்றி கழகத்தை துவங்கி, ஷீரடி கோவிலில் தரிசனம் செய்ததை வரவேற்கிறோம். “அவரது மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதில் நம்பிக்கையுடன் செயல்படுவது வரவேற்கத்தக்கது. ஆன்மீகம் இல்லாத அரசியல் என்பது இப்போது தெளிவாக உள்ளது” என்றார்.

இதையும் படிக்க  நடிகர் விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா தலைமையில் முதியோர் இல்லத்தில் மாபெரும் அன்னதானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *