நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதி, 17 நிபந்தனைகளுடன் காவல்துறையால் வழங்கப்பட்டிருக்கிறது.
வெற்றிக் கழக தலைவர் விஜய், முதலில் செப்டம்பர் 23ம் தேதி மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் சில காரணங்களால், மாநாட்டுத் தேதி அக்டோபர் 27க்கு மாற்றப்பட்டு, இந்தத் தேதி அங்கீகாரம் பெறப்பட்டது.
அக். 27ம் தேதி நடைபெறும் இந்த மாநாட்டிற்கு காவல்துறை விதித்த 17 நிபந்தனைகளில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடத்துவது முக்கியமானதாகும். தேசிய நெடுஞ்சாலையில் விளம்பர பதாகைகள் அல்லது கட்-அவுட்கள் வைக்கக் கூடாது. மேலும், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பான இடவசதி, மாநாட்டுத் திடலில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற வசதிகள் கிடைக்க வேண்டும்.
அதிகாரிகள், மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். மாநாட்டில் குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநாட்டுக்கு முன்பாகவே கட்சியின் முக்கிய பதவிகள் அறிவிக்கப்பட உள்ளன.
Leave a Reply