சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 15 மாதங்கள் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் செப்டம்பர் 26ஆம் தேதி நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமீனின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும், ரூ. 25 லட்சம் உத்தரவாதம் அளிக்க வேண்டும், மேலும் வழக்கின் சாட்சியங்களை கலைக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இன்று காலை, திமுக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்து வரவேற்பு தெரிவித்தனர். கரூர் எம்.பி. ஜோதிமணியும் செந்தில் பாலாஜியை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இதற்கிடையில், செந்தில் பாலாஜி விடுதலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ஜோதிமணி, “செந்தில் பாலாஜி எந்த சமரசமும் இன்றி, சட்டப்போராட்டம் மூலம் வெளிவந்துள்ளார். அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்,” என்றார்.
Leave a Reply