மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் பக்கீர் மைதீன் பாபு தலைமையில், மாவட்ட அவைத்தலைவர் மிர்பஹா ஷேக் தாவூத் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி ஷரீப் கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், கிளை கட்டமைப்புகள் மற்றும் மாவட்டத்தில் வரவிருக்கும் முப்பெரும் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இவ்விழாவில் தலைவர் மு. தமிமுன் அன்சாரி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) பங்கேற்க உள்ளார்.
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply