தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் நவம்பர் 9 வரை மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 9 வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு இன்று முதல் நவம்பர் 9 வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம் பகுதியில் நேற்று அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.

இதையும் படிக்க  பொள்ளாச்சியில் ஸ்ரீ ராஜகணபதி வள்ளி கும்மி கலைக்குழுவின் ஐந்தாவது அரங்கேற்ற விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து – 36 பேர் உயிரிழந்த சோகம்

Mon Nov 4 , 2024
அல்மோரா பகுதியில் 50 பயணிகளுடன் பயணம் செய்த பேருந்து பள்ளத்தில் விழுந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா அருகே இன்று காலை 50 பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கிறது. சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் விரைந்து சென்றுள்ளனர், மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
image editor output image12346103 1730708696355 - உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து விபத்து – 36 பேர் உயிரிழந்த சோகம்

You May Like