காலாண்டு விடுமுறையையொட்டி, ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் சிரமங்களை குறைக்க, 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்: செப். 27 மற்றும் 28 தேதிகளில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதில்,
சென்னை, கிளாம்பாக்கம்: திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 740 பேருந்துகள்.
கோயம்பேடு: திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 140 பேருந்துகள்.
மாதவரம்: 20 பேருந்துகள்.
மொத்தம் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் சுமார் 18,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், ஞாயிறன்று, ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Leave a Reply