தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 9 வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கேரள கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கு இன்று முதல் நவம்பர் 9 வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம் பகுதியில் நேற்று அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.