மரங்களில் வீடு கட்டி வசிக்கும் விவசாயிகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், 22ஆம் நூற்றாண்டிலும் இயற்கையோடு ஒன்றிணைந்து மரங்களில் வீடுகளை கட்டி வசிக்கும் விவசாயிகள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், கொழுமத்திற்கு அருகிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மேற்கொண்ட ஆய்வின்போது, ஆண்டிபட்டிக்கும் கொழுமத்திற்கும் இடையிலும், இரட்டையம்பாடிக்கும் இடையிலும் அமைந்துள்ள ராயர் குளம் பகுதியில், இம்மர வீடுகளை கண்டறிந்துள்ளனர்.

இந்த மரவீடுகள், பூர்வகுடி விவசாயிகள் தங்கள் வாழ்விடமாக மாற்றியுள்ளன. இயற்கையோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இவர்கள், காட்டு விலங்குகளை அச்சமின்றி எதிர்கொள்கின்றனர். யானைகள் மலையிலிருந்து தண்ணீர் குடிக்க வரும் போது, தென்னை மரங்களை மட்டும் சாய்ப்பதை கவனித்த இவர்கள், வேப்பமரத்தில் கட்டியிருக்கும் மரவீடுகளை பாதுகாப்பானதாகவும், மழை மற்றும் வெயிலிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

மரக்கிளைகளைக் கொண்டு இடைவெளியை உருவாக்கி, மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து கட்டிய இம்மர வீடுகள், பனை ஓலைகளால் மூடப்பட்டு, பிளாஸ்டிக் காகிதங்கள் மூலம் மழையைத் தடுக்கின்றன. 3 முதல் 6 பேர் வரை ஒரே சமயத்தில் வசிக்கக்கூடிய இம்மர வீடுகள், மிகுந்த உறுதியாகவும் வசதியாகவும் உள்ளன.

இதையும் படிக்க  ஸ்வீடனில் குழந்தைகள் செல் போன் பயன்படுத்த தடை...

இந்த மரவீடுகளில், இரண்டு வீடுகள் சமையலறை மற்றும் படுக்கையறையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இம்மர வீடுகளை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்து இதனை ஆவணப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...

Sat Aug 17 , 2024
நிலத்தடி நீர் செறிவூட்டும் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல தலைமுறைகளாக எதிர்பார்க்கப்பட்ட கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் தொடக்க விழா இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்று, அதிகாரப்பூர்வமாக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூன்று தலைமுறைகளின் கனவாக […]
images 50 - அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்...

You May Like