இன்றைய காலத்தில் பலரும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க திட்டமிட்டு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களுக்கு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள கிராம சுரக்ஷா யோஜனா, கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்: 19 வயது முதல் 55 வயது வரையிலான யாரும் இந்த திட்டத்தில் இணைந்து தினசரி ரூ.50 டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை பெற முடியும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.10,000, அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டின் நன்மைகள்: இந்த திட்டத்தின் மூலம் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர அடிப்படையில் முதலீடு செய்யும் வசதி உள்ளது. மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் பெறும் வசதியும் உண்டு.
80 வயதை நிறைவு செய்யும் போது, முழு பாலிசி தொகையான ரூ.35 லட்சம் முதலீட்டாளருக்கு ஒப்படைக்கப்படும். இதன்மூலம் கிராமப்புற மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராம சுரக்ஷா யோஜனா திட்டம், சிறு தொகையில் துவங்கி பெரிய தொகையாக பெற விரும்புபவர்களுக்கு சிறந்த ஒரு சேமிப்பு வாய்ப்பாகும்.