இன்றைய நவீன உலகில், செல்போன் பலருக்கும் ஒரு ஆறாவது விரலாக மாறி விட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செல்போனை தவிர்க்க முடியாத அளவிற்கு பயன்படுத்துகின்றனர். அத்துடன், செல்போனை அதிகமாக பயன்படுத்துவதால் குழந்தைகளில் மனச்சோர்வு, கவனக்குறைவு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது.
இந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக, சுவீடன் சுகாதாரத்துறை, பெற்றோர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி:**
-2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன் அல்லது டி.வி. போன்ற திரைத்தன்மை உள்ள சாதனங்களை பார்ப்பதை பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.
– 2 முதல் 5 வயதுடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 மணி நேரம் செல்போன் பயன்படுத்தலாம்.
– 6 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு 2 மணி நேரம் வரை செல்போன் பயன்படுத்த அனுமதிக்கலாம்.
– 13 முதல் 18 வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 மணி நேரம் செல்போன் பயன்படுத்தலாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.
இவை வழிகாட்டுதல்களாக இருந்தாலும், பெற்றோர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு இதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
Leave a Reply