நிலத்தடி நீர் செறிவூட்டும் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல தலைமுறைகளாக எதிர்பார்க்கப்பட்ட கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் தொடக்க விழா இன்று ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்று, அதிகாரப்பூர்வமாக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மூன்று தலைமுறைகளின் கனவாக இருந்து வந்த இந்த திட்டத்தின் தொடக்கத்தால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Leave a Reply