Friday, January 24

கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா…

கோவையில், M.K தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடைபெற்றது. தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் மற்றும் ஏழிசை மன்னர் M.K தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள் விழா கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடல் அருகே விமர்சையாக நடைபெற்றது.

கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா...

கோவையில் M.K. தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் விழா...

இந்த விழா, தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை நிறுவனர் மற்றும் தலைவர் பாண்டியன் தலைமையில் நடத்தப்பட்டது. விழாவின் ஒரு பகுதியாக, பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்ற திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. மேலும், தமிழ்நாடு அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் 21-ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நிர்வாகிகள் மற்றும் விஸ்வகர்மா சமுதாயத்திற்காக பாடுபடும் தலைவர்களுக்கு பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

அத்துடன், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு விஸ்வகர்மா பேரவை தலைவர் பாண்டியன், தமிழகத்தில் பொற்கொல்லர் நல வாரியம் செயல்படவில்லை என்றும் அதை கைவினையாளர்கள் நல வாரியமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தச்சு தொழிலாளர்கள், பொற்கொல்லர்கள், பாத்திரம் வேலை செய்பவர்கள், சிற்பம் வேலை செய்பவர்கள் உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்றும், தமிழ்நாடு அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மானியங்களை வழங்க வேண்டும் என்றும் கோரினார்.

இதையும் படிக்க  புதுச்சேரி கைவினைப் பொருள்கள் கண்காட்சி...!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *