கணவர் மாவட்ட ஆட்சியர்,மனைவி மாநகராட்சியின் ஆணையர் என கடலூரில் கணவன் – மனைவி ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.





கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய ஆட்சியராக சிபி ஆதித்யா செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு கடந்த 19-ந்தேதி  பொறுப்பேற்றார். இவருடைய மனைவி அனு. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், அரசு துணை செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது  கடலூர் மாநகராட்சி ஆணையராக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்-ஆணையாளர் அனு தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடலூர் மாநகராட்சியாக மாறியதற்கு பிறகு முதல் ஐஏஎஸ் அதிகாரியாக அனு பதவி ஏற்க உள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியராக கணவனும், கடலூர் மாநகராட்சி ஆணையாளராகவும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிக்க  "சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சுகாதாரமற்ற 1½ டன் ஆட்டு இறைச்சி...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : நான்கு பேர் சம்மன்  வழங்கிய கோவை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர்.

Wed Jul 24 , 2024
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மேலும் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்களில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்து நடத்தி வந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து இந்த […]
750x450 793129 untitled2 - கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : நான்கு பேர் சம்மன்  வழங்கிய கோவை சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர்.

You May Like