21 வருடங்களுக்கு பிறகு நுரையீரல் -சுவாசநோய்கள் குறித்த தேசிய மாநாடு

21 வருடங்களுக்கு பிறகு நுரையீரல் -சுவாசநோய்கள் குறித்த தேசிய மாநாடு

நுரையீரல் -சுவாசநோய்கள் குறித்த தேசிய மாநாடு, 21 வருடங்களுக்கு பின் கோவையில், 4 நாட்கள் நடக்கிறது.

WhatsApp Image at PM ()

கோவையில் நுரையீரல் மற்றும் சுவாச நோய்கள் குறித்த தேசிய மாநாடு (நாப்கான் 2024) நேற்று துவங்கி, 24ம் தேதி வரை பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது. தேசிய நுரையீரல் டாக்டர்கள் கல்லூரி (இந்தியா) மற்றும் இந்திய நுரையீரல் சங்கம் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள சுவாச மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டை நுரையீரல் மருத்துவத்தில் உலக புகழ்பெற்ற டாக்டர் பேராசிரியர் அதுல்சி மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் 2,200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த 54 பேரும், தேசிய அளவில், 640 பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உள்ளார்கள்.

WhatsApp Image at PM ()

மேலும், இந்த மாநாட்டில் நுரையீரல், அது தொடர்பான தீவிரசிகிச்சை மற்றும் சுவாச மருத்துவம் ஆகியவற்றில் சமீபத்திய முன்னேற்றங்களை உள்ளடக்கிய, 9 அமர்வுகள் இடம் பெறுகிறது. இந்த துறையில் முன்னணி மருத்துவ நிபுணர்களின், 600 சொற்பொழிவுகளும் நடைபெறுகிறது.

இதையும் படிக்க  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கியது.

தொடர்ந்து, ஆஸ்துமா நோய்கள் குறித்தும் அதற்கான நிவாரணம் குறித்த முக்கிய விவாதங்களும், அதில் தற்போது ஏற்பட்டுள்ள மருத்துவ முன்னேற்றங்கள் குறித்தும் பங்கேற்பாளர்களிடையே விவாதங்களும் நடைபெறுகிறது.

இது குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன்குமார் கூறுகையில், சுவாசநோய்கள் அதிகரிப்பு என்பது ஒரு குறிப்பிடத்தக்க பொதுசுகாதார கவலையாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விவாதம் செய்ய உலகம் முழுவதிலுமிருந்து, 2,200 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்,” என்றார்.

நுரையீரல் மருத்துவ மாநாட்டிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு தலைவர் டாக்டர் மோகன்குமார், செயலளார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் கோவை மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லாரியில் ரகசிய - 300 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர் கைது...

Fri Nov 22 , 2024
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு பகுதியில் ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் ரகசியமாக 300 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தவர்களை தஞ்சாவூர் சிறப்பு தனிப்படை போலீசார் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர். முடச்சிக்காடு கலைஞர் நகரில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று, லாரியில் கடத்தி வந்த கஞ்சாவை காருக்கு மாற்றிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், லாரியின் பெட்ரோல் டேங்க் பகுதியில் ரகசிய […]
image editor output image 216845759 1732258454973 | லாரியில் ரகசிய - 300 கிலோ கஞ்சா கடத்தல் 3 பேர் கைது...