இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு !

உடுமலை தீபாலப்பட்டி பகுதி சேர்ந்த பாலாஜி (வயது 28) ,இவரது உறவினர் ஒருவரை கோவையில் உள்ள விமான நிலையத்தில்  காரில் சென்று இறக்கிவிட்டு மீண்டும் தீபாலப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார், அப்போது பொள்ளாச்சி அருகே உள்ள தாமரைக்குளம் பகுதி தேசிய நெடுஞ்சாலை வந்து கொண்டிருந்தபோது சாலையின் இடது புறமாக எதிரே  வந்த இரு சக்கர வாகனம் மீது பாலாஜி ஓட்டி வந்த கார் மோதியது, இதில் கார் நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு சென்ற போது மேலும் எதிரே வந்த மூன்று இருசக்கர வாகனங்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பட்டணம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி(50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேரை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாசநாயக்கன்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மேலும் கார் ஓட்டுனர் உள்ளிட்ட நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், அதிகாலை நேரத்தில் பொள்ளாச்சி கோவை தேசிய நெடுஞ்சாலை ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி,மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கியது

Sat Aug 31 , 2024
கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தலைமையில் இன்று காலை கணுவாய் தடுப்பணை மேற்கு பகுதியில் தொடங்கியது. கோவை மேற்கு மலைத்தொடர்கள் தடாகம் பகுதியில் உள்ள, சுமார் 14 ஏக்கர் பரப்பளவுள்ள கணுவாய் தடுப்பணையை சீரமைத்து பராமரிக்கும் முயற்சியின் முதல் கட்டமாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மரக்கன்றுகள் வைத்து பணிகளை துவங்கினார்கள். கணுவாய் தடுப்பணை, சங்கனூர் நதியின் இடையே நீர்வளத்துறை […]
IMG 20240831 WA0041 | கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு பணி,மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கியது