Monday, January 13

ஆனைமலை நா.மூ. சுங்கம் ராமு கல்லூரியில் உற்சாகமாக ஓணம் விழா கொண்டாட்டம்….

ஆனைமலை அருகேயுள்ள நா.மூ. சுங்கம் ராமு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து, சண்டை மேளங்கள் முழங்க நடனமாடி, ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஆனைமலை நா.மூ. சுங்கம் ராமு கல்லூரியில் உற்சாகமாக ஓணம் விழா கொண்டாட்டம்....

ஒவ்வொரு ஆண்டும் மலையாள மக்கள் பெருமையுடன் கொண்டாடும் ஓணம் பண்டிகை, அஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோண நட்சத்திரம் வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. மகாபலி மன்னர் திருவோண நாளில் மக்களை வருகை தந்து, அவர்களின் நலன்களை பார்வையிடுவதாக மலையாள மக்கள் நம்புகின்றனர். இதை வரவேற்கும் விதமாக மகிழ்ச்சியுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், நா.மூ. சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா இன்று நடைபெற்றது. மாணவிகள் அத்தப்பூ கோலம் இடுவதோடு, கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து, சண்டை மேளம் முழங்க விழாவை கொண்டாடினர். மாணவ, மாணவிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிக்க  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் BioRad உடன் இணைந்து RT-PCR குறித்த நேரடி பயிற்சி !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *