மீன் மார்க்கெட் டெண்டர் விடப்படுவதை கண்டித்து காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள் இன்று மறியல் போராட்டம்.



திருச்சி காந்தி மார்க்கெட் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெற்று வருகிறது.

காந்தி மார்க்கெட்டை ஒட்டி மீன் மார்க்கெட், கறிக்கடை மார்க்கெட் உள்ளது .இந்த பழைய மார்க்கெட் அகற்றப்பட்டு ரூ 13 கோடியில் 148 கடைகள் மீன் மார்க்கெட்டிற்காக கட்டப்பட்டது. இதில் கீழ் தளத்தில் 74 கடைகளும், மேல் தளத்தில் 74 கடைகளும் கட்டப்பட்டன. இந்த கடைகள் பழைய வியாபாரிகளுக்கு மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கையும் வியாபாரிகள் வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் பழைய வியாபாரிகளுக்கு வழங்கப்படாது. நீங்கள் அனைவரும் டெண்டரில் கலந்து கொண்டு கடைகளை ஏலம் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இந்த மீன் மார்க்கெட்டுகான டெண்டர் நாளை நடக்கிறது. இதை கண்டித்து திருச்சி காந்த

இதையும் படிக்க  "ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை ஏற்க முடியாது: தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்தது இந்தியாவிற்கும் அவமானம் - தமிமூன் அன்சாரி"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அதிகபட்ச பால் கொள்முதல் செய்துள்ள ஆவின் நிறுவனம்.....

Tue Jul 23 , 2024
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச பால் கொள்முதலாக 36.09 இலட்சம் லிட்டர் பால், 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் மூலம் ஆவின் கொள்முதல் செய்துள்ளது. மேலும் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உள்ளூர் விற்பனையான 4 இலட்சம் லிட்டர் பால் கணக்கில் கொள்ளும்போது தமிழ்நாட்டில் பால்வளத்துறை மூலமாக 40 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2800 மெ.டன் வெண்ணெய்யும், 4200 மெ.டன் பால் […]
Avin 1 scaled - அதிகபட்ச பால் கொள்முதல் செய்துள்ள ஆவின் நிறுவனம்.....

You May Like