Friday, January 24

மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வேம்பையாபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு  ஊருக்குள் வந்த சிறுத்தை, ஐயப்பன் என்பவா் வீட்டில் வளா்த்து வந்த ஆட்டை தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு சென்று பாா்த்தபோது ஆட்டை விட்டுவிட்டு அங்கு நின்ற நாயை தூக்கிச் சென்றது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், பாபநாசம் வனச்சரகா் சத்யவேல் தலைமையில் வனத்துறையினா் பாா்வையிட்டனா். தொடா்ந்து வனத்துறையினா், வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்தையும், அகஸ்தியா்பட்டி, பசுக்கிடைவிளை பகுதிகளில் கரடி நடமாட்டத்தையும் தொடா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனா்.இந்த நிலையில், வேம்பையாபுரத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்த  சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை கோதையாறு வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க  மேட்டூர் அணையின் நீர் திறப்பு குறைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *