திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் இவரது மகள் ஆனந்தவள்ளி இவர் தனது தந்தை வீட்டில் அருகே வீடு ஒன்று புதியதாக கட்டி வருகிறார் . இதனால் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார் .
புதியதாக கட்டப்படும் வீட்டினை அவரது தந்தை சுந்தரம் மற்றும் சகோதரர் செந்தில் குமார் ஆகியோர் பராமரித்து வருகின்றனர் .
இந்நிலையில் இன்று காலை சகோதரர் செந்தில் குமார் புதியதாக கட்டப்படும் வீட்டில் சென்று பார்த்தபொழுது அங்கிருந்த மின் இணைப்பு உபகரணங்கள் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து தனது சகோதரி ஆனந்தவல்லிக்கு தகவல் தெரிவித்தார் .
தகவல் அறிந்த ஆனந்தவல்லி வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள் மற்றும் மின்இணைப்பு வயர்களை அறுத்து எடுத்து சென்றது தெரியவந்தது .
ஆனந்தவல்லி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் தினேஷ் குமாரின் உத்தரவின் பெயரில் சமயபுரம் காவல் ஆய்வாளர் தசரதன் மற்றும் உதவி ஆய்வாளர் கவிதா லால்குடி உட் கோட்ட குற்றப்பிரிவு போலீசார் சரவணன் மாரிஸ் நாகேந்திரன் சந்திரமோகன் .சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்ததில் அதே பகுதியைச் சேர்ந்த மர்லின் மகன் லோகேஸ்வரன் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது .
மேலும் லோகேஸ்வரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி எந்த ஒரு பணிக்கும் செல்லாமல் இதுபோல் புதியதாக வீடு கட்டும் இடங்களில் சென்று பொருட்களை திருடி எடைக்கு போட்டு வரும் பணத்தினை வைத்து குடிப்பதே வழக்கமாக கொண்டுள்ளார் .
புகார் அளித்து இரண்டு மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த சமயபுரம் போலீசாருக்கு அப்பகுதி போது மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Leave a Reply