பொள்ளாச்சி பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு RSS, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பொதுமக்கள் சார்பில் 227 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.,
இதில் செம்பாகவுண்டர் காலனி உள்ளிட்ட சில பகுதிகள் பதட்டமான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை பாதுகாப்பான முறையில் கொண்டாடவும் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.,
இந்த அணிவகுப்பு பேரணியை கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார்.,
பொள்ளாச்சி காந்தி சிலை பகுதியில் தொடங்கிய அணி வகுப்பு ஊர்வலம் உடுமலை சாலை வழியாக அரசு மருத்துவமனை, கடைவீதி வழியாக சென்று வெங்கட்ராமன் பள்ளி மற்றும் மத்திய பேருந்து நிலையம் பாலக்காடு சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காவலர் திருமண மண்டபம் பகுதியில் நிறைவடைந்தது.,
இந்த அணி வகுப்பு பேரணியில் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை காவலர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.,
பொள்ளாச்சி பகுதியில் அமைதியான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடவும் சிலைகள் வைக்கப்படும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கோவில்களில் என சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply