புனே கார் விபத்து தொடர்பாக 12க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைப்பு…..


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே 19-ஆம் தேதி 17 வயது சிறுவன் அதிவேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி இரு தகவல் தொழில்நுட்ப (IT)  பணியாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அஸ்வினி கோஸ்தா (24) மற்றும் அனீஷ் அவாதியா (24) என்று விசாரணையில் தெரியவந்தது.கார் ஓட்டிய சிறுவன் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் அரசு மருத்துவர்கள் இருவர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கார் விபத்து சம்பவத்தில், விரிவான விசாரணை நடத்தி பல்வேறு காரணங்களை கண்டறிய 100 பேர் கொண்ட 12க்கு மேற்பட்ட குழுக்களை காவல் துறையினர் அமைத்துள்ளனர்.குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒரு குழுவும், தகவல் பரிமாற்றத்துக்கு ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க  ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் இருவர் கைது .....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

Sun Jun 2 , 2024
தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. வெயில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் ‘ரீமெல்’ புயல் காரணமாக மே மாதம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்தது. தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 200 மி.மீ. […]
images 14 - 124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

You May Like