
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
ஆந்திரம் மற்றும் ஒடிஸா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியும், கேரள மாநிலத்தின் வயநாட்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் உள்ளனர்.