124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

images 14 - 124 ஆண்டுகளில் 7-ஆவது முறையாக அதிக மழை பதிவு!

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் பல இடங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. மே 4 ஆம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. வெயில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் ‘ரீமெல்’ புயல் காரணமாக மே மாதம் முழுவதும் தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்தது.

தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 200 மி.மீ. வரை மழை பதிவாகியது. இது மிக அதிக மழைப்பொழிவாகும். கடந்த 124 ஆண்டுகளில் மே மாதத்தில் அதிக மழை பதிவான 7 ஆவது வருடமாக இந்த ஆண்டு உருவாகியுள்ளது. 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில் 205.2 மி.மீ. மழை பதிவாகியது. இதற்குப் பிறகு, 1930 இல் 163.7 மி.மீ., 1972 இல் 149.4 மி.மீ., 1955 இல் 148 மி.மீ., 1995 இல் 142.5 மி.மீ., 2014 இல் 139.3 மி.மீ. மற்றும் இந்த ஆண்டில் (2024) 138.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிக்க  வனப்பகுதியில் யானை சடலம்: வனத்துறையினர் விசாரணை

இந்த ஆண்டில், தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 19 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts