புகழ்பெற்ற அக்காமலை தேசிய பூங்காவில் அபூர்வ ஊர்வன உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், புலிகள், வரையாடுகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் கணக்கெடுப்பு வருடம் தோறும் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக அக்காமலை கிராஸ் ஹில், உலாந்தி மற்றும் கரியன் சோலா தேசிய பூங்காவில் செப்டம்பர் 3 முதல் 5 வரை ஊர்வன ஆய்வு (ஹெர்பெட்டோபவுனா) கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வால்பாறை அருகே உள்ள 3122 ஹெக்டேர் பரப்பளவில் […]
தமிழ்நாடு
பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், வந்தியம்மை தாயார், மற்றும் அருள்மிகு மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையுடன் ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு, வாணியர் மடத்திலிருந்து அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சீர்வரிசைகள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு, கோயிலில் சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், குழந்தைகள் சிவன் மற்றும் வந்தியம்மை தாயார் வேடமணிந்து திருவாசம் பாடி வழிபாடுகளை நடத்தினர். […]
கோவை மண்டல திமுக மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகளின் பொறியியாளர் அணியின் ஆய்வுக் கூட்டம். மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, திமுக பொறியியாளர் அணியின் கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் கோவை டாடாபாத் கிஸ்கால் கிராண்ட் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் தலைமை தாங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் […]
பொள்ளாச்சி ரயில் நிலையம் 2023-2024 ஆண்டில் 5.25 லட்சம் பயணிகளின் பயணத்துடன், ரூ.7 கோடி வருவாயை ஈட்டி, கோவை மாவட்டத்தில் 4வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் 72வது இடத்திலும் உள்ளது. பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், காட்பாடி, கரூர், நாமக்கல், திண்டுக்கல், பழனி, விருதுநகர், கோவில்பட்டி, தென்காசி, மேட்டுப்பாளையம், கோவை, பாலக்காடு, திருச்சூர், […]
கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு, சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்குள் பேரம் பேசுவதற்கான உத்தியாக இருக்கலாம் என்றும், அல்லது திமுகவை மிரட்டும் நோக்கத்துடன் ஏற்பாடாக இருக்கலாம் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை தெப்பக்குளம் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவக்கி வைத்த அவர், தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் ஐம்பது ஆண்டுகளாக மக்களை ஒருமித்து கொண்டாடப்படுவதாக கூறினார். […]
கோவை: ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா ஆடிட்டோரியத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மகத்தான ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா ரிஜன் சேர்பர்சன் MJF T.வெங்கடகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி, உதவி ஆணையாளர் சேகர் மற்றும் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம், முதலாம் துணை ஆளுநர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர். இதில், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, உதகை […]
பொள்ளாச்சி அருகே உள்ள கொல்லப்பட்டி அங்கன்வாடி மையத்தில் உணவில் பல்லி விழுந்தது காரணமாக உணவு உண்ட 6 குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி: கொல்லப்பட்டி பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், நிதின் மற்றும் மிதுன் கிருஷ்ணா ஆகிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். அதேசமயம் தடுப்பூசி செலுத்த வந்த தன்ஷிகா, சுஜை, தேவபிரசாத், புகழ்மதி ஆகிய குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் சிவகாமி மற்றும் செல்வநாயகி மதிய உணவை வழங்கினர். […]
கோவை மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்தார். பொள்ளாச்சி அருகே சமத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்தார். மேலும், 275 பயனாளிகளுக்கு ரூ.89.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். […]
திருச்சி, செம்பட்டு அருகே எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சந்திப்பு நடந்தது. இந்த கூட்டம் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை முபாரக், தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, நெல் கொள்முதல் மற்றும் விவசாய நிலம் கையகப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளை விமர்சித்தார். வக்பு திருத்தச் சட்டம்:வக்பு திருத்தச் சட்டம் வக்பு சொத்துகளை கபளீகரம் செய்து, […]
“மக்களுக்கும் யானைகளுக்கும் பிரச்சனை வராதவாறு யானை வழித்தடங்களை நிர்ணயிக்கும் பணியில் வனத்துறை செயலில் ஈடுபட்டுள்ளது” – வனத் தியாகிகள் தினத்தில் வனத்துறை அமைச்சர் பேட்டி கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் தேசிய வனத் தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை மற்றும் தமிழ்நாடு வன உயிர்பயிற்சியக அதிகாரிகள் கலந்து கொண்டு, வனத் தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை […]