பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர், வந்தியம்மை தாயார், மற்றும் அருள்மிகு மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனையுடன் ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு, வாணியர் மடத்திலிருந்து அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குச் சீர்வரிசைகள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு, கோயிலில் சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர், குழந்தைகள் சிவன் மற்றும் வந்தியம்மை தாயார் வேடமணிந்து திருவாசம் பாடி வழிபாடுகளை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Leave a Reply