கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு பெற்றனர். இந்த தடகள போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்று […]

அனைவரும் இருதயத்தை பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். உலகம் முழுவதும் தற்போது உள்ள கால கட்டத்தில் இருதய பிரச்சனை என்பது அதிகமாகி வருகிறது.குறிப்பாக இருதய பிரச்சனையால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர்.இத்தகைய இருதயத்தை சீராக வைத்துகொள்ள உடற்பயிற்சி,சரியான உணவு முறைகள் அவசியம்,புகைபிடித்தலை தவிர்த்து, இதயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மாரத்தான் […]

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 86வது வார்டின் உக்கடம் புல்லுக்காடு பகுதியில், சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையத்துக்கு அருகில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் படி தலைமையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் […]

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) ஸ்போர்ட்ஸின் கீழ், திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு சிலம்பம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, சிறப்பாக சிலம்பம் பயிற்சி பெற்ற மூத்த மாணவர்களும், யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் S. ரபீக் அவர்களும், சென்னையில் நடைபெற்ற சிலம்பம் நடுவர் பயிற்சி முகாமில் இன்று பங்கேற்றுள்ளனர். இங்கு நடுவர் (Silambam Judge) மற்றும் நடுவர் பயிற்சியில் (Silambam Referee) அவர்கள் […]

திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில், தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட தடகள வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. செப்டம்பர் 22 முதல் 26, 2024 வரை, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளில், திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 17 வயதினருக்கான பிரிவில், […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிபட்டியில் செயல்படும் திஷா இன்டர்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில், தேசிய அளவிலான கொரிய தற்காப்புக் கலையான டேக் கொண்டோ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், பீகார், ஒடிசா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயதினரை தனித் பிரிவாக பிரித்து, 69 பிரிவுகளில் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு […]

கோவைகோவையில் ஆசிப் அண்ட் பிரதர்ஸ் பிரியாணி சென்டரின் புதிய கிளை திறப்பு ரயில் நிலையத்தில் தேசிய அளவில் 14 மாநிலங்கள் மோதிய கோ விளையாட்டு போட்டியில் கோவையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு. 2024 ஆம் ஆண்டு தேசிய அளவில் 2 வது ஜோடி கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் செப்டம்பர் 4 வரை பீகாரில் போஜ்பூர், ஆரா ஆகிய […]

பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி பகுதியில் உள்ள திஷா பள்ளியில் சி.ஐ.எஸ்.சி.இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா,உத்தர பிரதேசம், வெஸ்ட் பெங்கால், ஒடிசா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இருந்து 600 க்கு மேற்பட்ட மாணவி மாணவிகள் கலந்து கொள்கின்றனர். டேக்வாண்டோ போட்டி 14,17,19 ஆகிய வயதுகளுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு இடையே மூன்று பிரிவுகளில் […]

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்த திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு பெடரேஷன் சார்பில் சர்வதேச இளைஞர் விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளம், பொக்காரா ஸ்டேடியத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென கபடி, பேட்மிட்டன், கிரிக்கெட், […]

திருச்சியின் ஸ்ரீரங்கம் பகுதியில் கிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் இந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு மிகவும் பிரபலமானது. இவ்விழா கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி, ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள கண்ணன் பஜனை மடத்தில் இந்த உறியடி உற்சவம் மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக, 50 அடி உயரத்தில் வழுக்கு மரம் நிறுவப்பட்டு, அதன் உச்சியில் மாலையுடன் சிறிய […]