கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்ற தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு பெற்றனர்.
இந்த தடகள போட்டிகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த தடகள வீராங்கனைகள் இந்த போட்டியில் சிறப்பாக பங்கேற்று சாதனை படைத்தனர்.
17 வயதுக்கான பிரிவில் பவதாரனி 800 மீட்டர், 1500 மீட்டர், 4×100 மீட்டர் ரிலே போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல், 14 வயதுக்கான பிரிவில் கிருத்திகா 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் போட்டிகளில் தங்கப்பதக்கம் மற்றும் 4×100 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், பெற்றோர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், ரயில்வே துறை கண்காணிப்பாளர் தமிழரசன், தடகள பயிற்சியாளர் முனியாண்டி, அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார், மாற்றம் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வீராங்கனைகளை வாழ்த்தினர்.
Leave a Reply