திருச்சியில் மாற்றம் அமைப்பின் சார்பில், தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட தடகள வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது.
செப்டம்பர் 22 முதல் 26, 2024 வரை, கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகளில், திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 17 வயதினருக்கான பிரிவில், பிரியதர்ஷனி 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்கிறாள், மற்றும் 14 வயதினருக்கான பிரிவில் கிருத்திகா 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க உள்ளாள்.
மேலும், ஈரோடு மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழக தடகள சங்கத்தின் மாநில அளவிலான போட்டிகளில், திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 20 வயதுக்குட்பட்ட பிரிவில் ராகுல், வெற்றி கெவின், 18 வயதினருக்கான பிரிவில் கிருபா லட்சுமி, ஷர்லி, மற்றும் 14 வயதினருக்கான பிரிவில் பர்வேஷ்தர்ஷன், அனுப்பிரியா, யோகதர்ஷினி, அகல்யா ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரும் தகுதி சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், மாற்றம் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளின் சார்பில் இவ்வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஆர். கோவிந்தராஜ், ரயில்வேத் துறையின் தமிழரசன், தடகள பயிற்சியாளர் முனியாண்டி, அமிர்தம் அறக்கட்டளை தலைவர் யோகா விஜயகுமார், மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply