Tuesday, January 21

இருதயம் பாதுகாப்பு குறித்த மாரத்தான் போட்டி – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…

அனைவரும் இருதயத்தை பாதுகாப்பாக வைத்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர்.

இருதயம் பாதுகாப்பு குறித்த மாரத்தான் போட்டி - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...

இருதயம் பாதுகாப்பு குறித்த மாரத்தான் போட்டி - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...

உலகம் முழுவதும் தற்போது உள்ள கால கட்டத்தில் இருதய பிரச்சனை என்பது அதிகமாகி வருகிறது.குறிப்பாக இருதய பிரச்சனையால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர்.இத்தகைய இருதயத்தை சீராக வைத்துகொள்ள உடற்பயிற்சி,சரியான உணவு முறைகள் அவசியம்,புகைபிடித்தலை தவிர்த்து, இதயத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட் எனும் தலைப்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் கொடியாசைத்து துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து மூன்று கிலோமீட்டர், ஐந்து கிலோ மீட்டர், பத்து கிலோமீட்டர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.இதில் சிறுவர், சிறுமியர்கள்,பெரியவர்கள் வீல் சேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பங்கேற்று ஓடினர்.

இதையும் படிக்க  மாநில அளவிலான தடியூன்றி  தாண்டுதல்  போட்டியில் கோவை பள்ளி மாணவி தங்கப்பதக்கம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *