கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 86வது வார்டின் உக்கடம் புல்லுக்காடு பகுதியில், சூரிய மின்னாற்றல் உற்பத்தி மையத்துக்கு அருகில் புதியதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை, மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் படி தலைமையில், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மண்டல உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மாமன்ற உறுப்பினர் அகமதுகபீர், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பசுமை குழுவைச் சேர்ந்த ஓசை செய்யது, டிஎம்எம்கே மாநில செயலாளர் சாகுல் ஹமீது, மாநில பிரதிநிதிகள் சுல்தான் அமீர், அக்பர் அலி, மாவட்ட தலைவர் சர்புதீன், மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சிராஜுதீன், துணைத்தலைவர் அபாஸ், துணைச் செயலாளர்கள் நூர்தீன், அசாருதீன், பைசல் ரகுமான், அபு, ஆஷிக் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply