திருச்சியில் சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் !


அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியராக அறிவிக்கப் பெற்று, கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக ஊழியர்களுக்கு ரூ. 26,000 மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 21,000 வழங்க வேண்டும். மேலும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சம், குறைந்தபட்ச டி.ஏ உடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9000 வழங்க வேண்டும் எனவும், 10 ஆண்டுகள் பணி முடித்த பின் மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் அல்லது மேற்பார்வையாளருக்கான ஊதியம் வழங்க வேண்டும் எனவும், மே மாத விடுமுறை ஒரு மாதம், மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்குப் போல் ஒரு வருடம் வழங்க வேண்டும் எனவும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

img 20240913 wa00316979595921586982034 - திருச்சியில் சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் !

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி தலைமையிட்டார். மாவட்ட துணைத் தலைவர் அகிலாண்டேஸ்வரி, வட்டார தலைவர் அர்ச்சனா, வட்டார செயலாளர் கலைவாணி, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், வட்டார துணைத் தலைவர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

இதையும் படிக்க  பொள்ளாச்சி திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் பவள விழாவை இல்லம் தோறும் கொடி ஏற்றி கொண்டாட தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு

Sat Sep 14 , 2024
ஆனைமலை அருகே நா.மூ.சுங்கம் முதல் மஞ்ச நாயக்கனூர் வரை உள்ள ஆனைமலை-உடுமலை சாலையில் ரூ. 2 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த 10 மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீர்மானித்தனர். இதனை அறிந்த பசுமை குழு மற்றும் மரங்கள் மறுநடவு நிபுணர் “கிரீன் கேர்” சையத் மற்றும் இயற்கை ஆர்வலர் மரம் […]
IMG 20240914 WA0009 - மரங்களை வெட்டாமல் மறுநடவு செய்த இயற்கை ஆர்வலர்களுக்கு பாராட்டு

You May Like