ஆனைமலை அருகே நா.மூ.சுங்கம் முதல் மஞ்ச நாயக்கனூர் வரை உள்ள ஆனைமலை-உடுமலை சாலையில் ரூ. 2 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, சாலை விரிவாக்கத்துக்கு இடையூறாக இருந்த 10 மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இதனை அறிந்த பசுமை குழு மற்றும் மரங்கள் மறுநடவு நிபுணர் “கிரீன் கேர்” சையத் மற்றும் இயற்கை ஆர்வலர் மரம் மாசிலாமணி ஆகியோர் இணைந்து, வெட்ட இருந்த புங்கமரம், வேப்பமரம், ஆயமரம் உள்ளிட்ட 10 மரங்களை கிரேன் மற்றும் ஜேசிபி ஆகிய இயந்திரங்களின் உதவியுடன் சாலையில் இருந்து பாதுகாப்பாக அகற்றி, வேறு இடத்தில் மறுநடவு செய்தனர்.
மரங்களை வெட்டாமல் அவற்றை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்த செயலை மகிழ்ச்சியுடன் ஏற்ற அப்பகுதி மக்கள், சையத் மற்றும் மரம் மாசிலாமணி ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
Leave a Reply