பொள்ளாச்சி அருகே  அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி !

பொள்ளாச்சி அருகே உள்ள கொல்லப்பட்டி அங்கன்வாடி மையத்தில் உணவில் பல்லி விழுந்தது காரணமாக உணவு உண்ட 6 குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி: கொல்லப்பட்டி பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில், நிதின் மற்றும் மிதுன் கிருஷ்ணா ஆகிய குழந்தைகள் பயின்று வருகின்றனர். அதேசமயம் தடுப்பூசி செலுத்த வந்த தன்ஷிகா, சுஜை, தேவபிரசாத், புகழ்மதி ஆகிய குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் சிவகாமி மற்றும் செல்வநாயகி மதிய உணவை வழங்கினர்.

img 20240911 wa00461750273586333866101 - பொள்ளாச்சி அருகே  அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி !

உணவு வழங்கப்பட்ட பிறகு, உணவு சமைத்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுக்க முயன்றனர். இருப்பினும், சிறிதளவு உணவை ஏற்கனவே உண்டிருந்ததால், குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

img 20240911 wa00538327025246402031767 - பொள்ளாச்சி அருகே  அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி !

பணியாளர்கள், பெற்றோருடன் சேர்ந்து, குழந்தைகளை உடனே பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள், குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து, அவர்களை நான்கு மணி நேரம் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று அறிவித்தனர்.

இதையும் படிக்க  "பொள்ளாச்சி அருகே பேருந்து விபத்தில் மாணவர்கள் பலி"
img 20240911 wa00527164463011494900344 - பொள்ளாச்சி அருகே  அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 6 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி !

இந்த சம்பவம் தொடர்பாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா, அங்கன்வாடி பணியாளர்கள் சிவகாமி மற்றும் செல்வநாயகி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். நெகமம் காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேலாய்வு நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 215க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா !

Wed Sep 11 , 2024
கோவை: ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா ஆடிட்டோரியத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மகத்தான ஆசிரியர்களை கௌரவிக்கும் விழா ரிஜன் சேர்பர்சன் MJF T.வெங்கடகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி, உதவி ஆணையாளர் சேகர் மற்றும் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம், முதலாம் துணை ஆளுநர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர். இதில், கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, உதகை […]
IMG 20240911 WA0058 - கோவையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 215க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கௌரவிப்பு விழா !

You May Like