சென்னை அருகே 12 வயது சிறுவனை ராட் வெய்லர் நாய் கடித்த நிலையில், உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொளத்தூா் ஆசிரியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெரால்டு (12) என்ற சிறுவன், சனிக்கிழமை தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த பொழுது, அப்பகுதியில் இருந்த ‘ராட் வெய்லா்’ நாய் திடீரென சிறுவனை கடித்தது
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள் அந்த நாயை விரட்டினா். நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த ஜெரால்டை பொதுமக்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீசார் விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் நாயின் உரிமையாளர் மீது இரு பிரிவுகளில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிறுவனை கடித்த நாய்: உரிமையாளர் மீது வழக்கு பதிவு
Follow Us
Recent Posts
-
பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்…
-
கோவையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம்…
-
கோவையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய மு ATK ஸ்கேன் லேப் மற்றும் டைக்னோஸ்டிஸ் திறப்பு விழா…
-
கோவை திரைப்பட வீநியோகஸ்தர்கள் சங்க பதவியேற்பு விழா…
-
கல்லூரிக்குள் வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்…
Leave a Reply