இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி தினத்தில் கொண்டாடப்படுகிறது. இன்று நாடு முழுவதும், இவ்விழா மிகுந்த உற்சாகத்துடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள பல விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வீடுகளில், சிறிய அளவில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டு, இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பெரிய சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் ராஷ்ட்ரிய ஸநாதன சேவா சங்கம், பிராமின் அசோசியேஷன் மற்றும் அகில பாரத மக்கள் கட்சி இணைந்து, கோவை மாவட்டத் தலைவர் எஸ். சேகர் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
விழாவின் ஆரம்பமாக அதிகாலையில் விநாயகர் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர், விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அருள் பாலிக்கப்பட்டது.
அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் எஸ். ராமநாதன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அன்னதானத்தை துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாநிலத் தலைவர் பாபு பரமேஸ்வரன், மாநில பொதுச் செயலாளர் கே. ரவிச்சந்திரன், கோவை மாநில வர்த்தக அணித் தலைவர் மாதவன், மாவட்ட துணைத் தலைவர் சிவாஜி, மாவட்ட பொதுச் செயலாளர் K. ரமேஷ், செயலாளர் K. S. கோபாலகிருஷ்ணன், தலைவர் வழக்கறிஞர் பிரிவு எம். அஜய் பிரபு, ஊடகப் பிரிவு V. K. நாகராஜ், இளைஞரணி தலைவர் K. M. சதீஷ், இளைஞரணி துணைத்தலைவர் மோகன், மகளிர் அணி தலைவி இந்திரா நாகராஜ், N. விக்னேஷ் குமார், R. பிரவீன் குமார், சுதர்சன் மற்றும் பலர், கட்சி நிர்வாகிகள், பக்தர்கள், மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.