Thursday, February 13

அங்கலக்குறிச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றாத பேருந்து ஓட்டுனருக்கு எதிராக பொதுமக்கள்  வாக்குவாதம்

அங்கலக்குறிச்சியில்அங்கலக்குறிச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றாத பேருந்து ஓட்டுனருக்கு எதிராக பொதுமக்கள்  வாக்குவாதம் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை ஏற்றாமல் சென்ற பேருந்து ஓட்டுனருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சியில் இருந்து அங்கலக்குறிச்சி, ஆனைமலை வழியாக ஆழியாறு செல்வதற்கான 10B எனும் அரசு பேருந்து இயங்கிவருகிறது. இன்று காலை, அங்கலக்குறிச்சியில் உள்ள தபால் நிலையம் அருகே, ஆழியாறு அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக சில பயணிகள், உட்பட ஒரு நிறைமாத கர்ப்பிணி, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

அங்கலக்குறிச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றாத பேருந்து ஓட்டுனருக்கு எதிராக பொதுமக்கள்  வாக்குவாதம்

அந்தப் பெண் சைகை செய்து பேருந்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டபோதும், ஓட்டுனர் அதனை பொருட்படுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதனால், மருத்துவமனைக்காக வந்த கர்ப்பிணி பெண்ணும் மற்ற பயணிகளும் அவதிப்பட்டனர்.

அங்கலக்குறிச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றாத பேருந்து ஓட்டுனருக்கு எதிராக பொதுமக்கள்  வாக்குவாதம்

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், பேருந்து திரும்பியபோது அதை அங்கலக்குறிச்சியில் நிறுத்தி, ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஓட்டுனர், அந்த பகுதியில் பேருந்து நிறுத்தம் இருப்பதைத் தெரியாமலேயே அதனை கடந்து சென்றதாக கூறியதாலும், அவர் இன்று புதியதாக இந்த வழித்தடத்தில் பணியில் ஈடுபட்டிருப்பதாக விளக்கம் அளித்ததாலும், பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

இதையும் படிக்க  பவதாரணி திருஉருவ படத்திற்கு மரியாதை - விசிக தலைவர்
அங்கலக்குறிச்சியில் கர்ப்பிணி பெண்ணை ஏற்றாத பேருந்து ஓட்டுனருக்கு எதிராக பொதுமக்கள்  வாக்குவாதம்

இவ்விளக்கத்திற்குப் பின்னர், கோட்டூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை சீராகியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *