மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

IMG 20240828 WA0000 - மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

கோவை: இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், கோவை அவினாசி சாலை, வஉசி பூங்கா அருகிலுள்ள காவலர் சமுதாயக் கூடத்தில், மத்திய அரசின் ‘மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள்’ குறித்த விழிப்புணர்வு கண்காட்சி இன்று துவங்கியது. இந்த கண்காட்சி ஆகஸ்ட் 31 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

கண்காட்சியில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி, ஆதார் திருத்தம், விழிப்புணர்வு திரைப்படங்கள், கருத்தரங்கு, பல்துறை சார்ந்த அரங்குகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இன்று நடைபெற்ற துவக்க நிகழ்வில், கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, இயக்குனர் லீலா மீனாக்ஷி, மற்றும் திருச்சி அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் தேவி பத்மநாபன் உள்ளிட்டோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிக்க  சிட்டுக்குருவி பாதுகாப்புக்காக கூடு வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சி

img 20240828 wa0002591447152762647969 - மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

img 20240828 wa00014101133717397299822 - மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

img 20240828 wa00038607540193370971394 - மக்கள் நலவாழ்வு திட்டம் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி துவக்கம்

நிகழ்வுக்கு முன்பாக, மத்திய அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பேரணியை, கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னையில் உள்ள மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குனர் லீலா மீனாக்ஷி, இளைஞர்கள் அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்களிடமும், மற்றவர்களிடமும் பகிர வேண்டும் என கேட்டுக் கொண்டார். கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை, இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு கல்வி சார்ந்த வழிகாட்டுதல்கள் பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ‘மாநில, மத்திய அரசுகள் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அதனை மக்களிடம் கொண்டு செல்ல இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியமானவை’ என தெரிவித்தார். மேலும், பெண்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பெண்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிக்க  திருச்சி கே.எப்.சியில் நுகர்வோருக்கான “ஓப்பன் கிச்சன் டூர்” அறிமுகம் !

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலன், மகளிர் உரிமை துறை, கனரா வங்கி, இந்திய தர நிர்ணய அமைவனம், பிரதம மந்திரி மக்கள் மருந்தகம், தபால் துறை, சங்கரா கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில், கற்பகம் கல்லூரி, அபிராமி நர்சிங் கல்லூரி, மற்றும் ரத்தினம் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *