மத்திய கிழக்கு பகுதியில் போர்ப்பதற்றம் தீவிரமாகி வரும் நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதல்கள் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளன. கிழக்கு காசாவில், மக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பள்ளி மீது இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய வான் வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல், பஜர் எனப்படும் பகல் நேர தொழுகை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், கடந்த ஒரு வாரத்தில் 4 பள்ளிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. ஆகஸ்ட் 4 அன்று 2 பள்ளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர், அதற்கு முந்தைய நாளில் நடந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆகஸ்ட் 2 அன்று மற்றொரு பள்ளி மீது நடந்த தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.
இந்த பள்ளிகளில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் ஒளிந்திருந்ததாகக் கூறி, இஸ்ரேல் தனது தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளது. அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய இத்தாக்குதல்களில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply